இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதலில் மூன்றாம் தரப்புக்கள் தலையீடு செய்தால் உடனடியான பதிலடி வழங்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (Supreme National Security Council) வியாழக்கிழமை பிற்பகலில் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எதிரியுடன் மோதல் தொடரும் — இழப்புகளுக்கான ஈடுசெலுத்தும் வரை அதை நிறுத்தமுடியாது” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் மூன்றாவது நபர் அல்லது நாடு தலையீடு செய்தால், திட்டமிட்ட முறையில் உடனடி பதிலடி வழங்கப்படும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா அல்லது வேறு எந்த நாட்டையும் நேரடியாகக் குறிப்பிடாமல் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் அணுஆயுத திட்டங்களை தடுக்க இஸ்ரேலை ஆதரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்ற முடிவை இன்னும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் தாக்குதல் திட்டங்களை ஆய்வு செய்தாலும், ஈரான் தனது அணுஆயுத நடவடிக்கைகளில் பின்வாங்குகிறதா என்பதை பார்த்துவிட்டு தான் தீர்மானிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.