சுவிட்சர்லாந்தில் பெண்கள் குழந்தைகள் பெறும் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது என்று நாட்டின் புள்ளிவிவர அலுவலகம் (FSO) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டுக்கான இறுதி புள்ளிவிவரங்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நாட்டில் ஒரு குடும்பத்தின் சராசரி அளவும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
- மூன்றாவது குழந்தை பிறப்பு – 6% குறைவு
- இரண்டாவது குழந்தை பிறப்பு – 8% குறைவு
- முதல் குழந்தை பிறப்பு – 5% குறைவு
இதன் மூலம், குடும்பங்கள் உருவாகும் எண்ணம் மிக அதிகமாக பாதிக்கப்படவில்லை என்றாலும், விரிவடையும் எண்ணிக்கையில் குறைவுதான் அதிகமாக இருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
2024ஆம் ஆண்டுக்கான இறுதி திருத்தப்பட்ட தரவுகளின்படி,ஒரு பெண்ணுக்கு சராசரியாக 1.29 குழந்தைகள் என பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச குறைவான பிறப்பளவு ஆகும். (முந்தைய தரவு: 1.28)
திருமணங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் விவகாரத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு, வீட்டுக் கடன், சமூகக் கட்டமைப்பு, வேலை மற்றும் குடும்ப வாழ்க்கை சமனிலை போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த பிறப்பு வீத வீழ்ச்சி பதிவாகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.