இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு தனது கப்பல்கள் மற்றும் விமானங்களை நகர்த்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய கிழக்கில் காணப்படும் தனது ராணுவ சொத்துகளையும் உபகரணங்களையும் பாதுகாக்க அமெரிக்கா பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கத்தாரில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய விமானப்படைத் தளமான அல-உதெய்த் (Al-Udeid Air Base) தளத்திலிருந்து பாதுகாப்பின்றி இருந்த அனைத்து விமானங்களும் மாற்றப்பட்டுள்ளன.
ஜூன் 19ஆம் திகதி எடுத்த செயற்கைக்கோள் புகைப்படங்களில், இந்த தளத்தில் விமானங்கள் இல்லாத வெறிச்சோடிய நிலை தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
அல-உதெய்த் விமானப்படைத் தளத்தில் உள்ள காவல் இல்லாத விமானங்கள் வேறும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டன.
பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படையின் நவல் சப்போர்ட் ஆபரேஷன் தளத்தில் இருந்த அனைத்து கப்பல்களும் துறைமுகத்தை விட்டு நகர்த்தப்பட்டன.
அமெரிக்க மத்திய கட்டுப்பாட்டு தளத்தின் (US Central Command) கீழ் அதிக அளவில் இரத்தம் (blood supply) முன்பதிவாக வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நடவடிக்கைகள், ஈரான் சார்பிலான தாக்குதல்களை எதிர்பார்த்தே மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
“இவை வெறும் முன்னெச்சரிக்கைக்காக செய்யப்பட்ட திட்டமிடல்களாகும்,” என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஜனவரி 2024ல், ஈரான் ஆதரவு பெற்ற சியா படை ட்ரோன் தாக்குதலில் அமெரிக்காவின் ‘Tower 22’ தளத்தில் மூன்று அமெரிக்க ராணுவத்தினர் உயிரிழந்ததும், பத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
டொனால்ட் டிரம்ப் இன்னும் ஈரானின் அணுவாயுத தளங்களை தாக்கவேண்டுமா என்பதைத் தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், அமெரிக்கா தாக்குதல் மேற்கொண்டால், ஈரான் நேரடியாக பதிலடி கொடுக்கும் என்றும், மண்டலத்தில் பல பதிலடி குழுக்கள் (proxy groups) ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.