உலகளாவிய ரீதியில் இணைய பயனர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் பாரியளவு தரவுத் திருட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இணைய பாதுகாப்பு சந்திக்காத அளவிற்கு பெரிய சவாலுக்கு நேரிட்டிருக்கிறது.
2024 மே 23 அன்று 184 மில்லியன் கணக்குகள் தொடர்பான கடவுச்சொற்கள் கசியலுக்குப் பிறகு, தற்போது மொத்தமாக 16 பில்லியன் பயனர் தகவல்கள் – அதாவது 1,600 கோடி கணக்குகளின் கடவுச்சொற்கள் உள்ளிட்ட விபரங்கள் – களவாடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகில் இதுவைரயில் பதிவான மிகப்பெரிய தரவுத் திருட்டுச் சம்பவமாக இந்த தகவல் பதிவாகியுள்ளது.
30 மாபெரும் தரவுத்தொகுப்புகளிலிருந்து இவ்வாற தரவுகள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வொன்றிலும் மில்லியனிலிருந்து பில்லியன் வரையிலான பயனர் புகுபதிகை தகவல்கள் களவாடப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அப்பிள், முகநூல், இஸ்டாகிராம், டெலிகிராம், கூகுள் உள்ளிட்ட முக்கிய தளங்களின் தகவல்கள் களவாடப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதில் பெரும்பாலும் புதிய மற்றும் அதிக மதிப்புடைய கணக்குகள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், இது பழைய கடவுச்சொல் திருட்டு அல்ல எனவும் ஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.
“இது ஒரு தகவல் களவாடல் சம்பவம் மட்டும் அல்ல. இது ஒரு பயங்கர சைபர் தகலிக்கான திட்ட வரைபடம் சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் விலியஸ் பெட்காஸ்காஸ் கூறியுள்ளார்.
பயனர்களின் கணக்குகளுக்கு நேரடிடியாக புகுவதற்கு தேவையாக தரவுகள் களவாடப்பட்டுள்ளதாகவும் இதனால் பயனர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயனர்கள் தங்களது கடவுச்சொற்களை உடனடியாக மாற்றியமைப்பது மிகவும் அவசியமானது என நிபுணர்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.