ஈரான் அணுசக்தி அமைப்பின் தலைவர் மொஹம்மட் எஸ்லாமி, ஐக்கிய நாடுகளின் அணுஆயுத கண்காணிப்பு அமைப்பான IAEA (International Atomic Energy Agency) தலைவர் ரஃபெயல் கிரோஸ்ஸி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் உள்ள அரக் அணுசக்தி மையம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்குப் பின்னர், கிரோஸ்ஸி “மௌனமாக இருந்ததற்காக” கடும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
“செயலற்ற நிலையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து, இஸ்ரேலிய அரசின் இந்த இடையீடுகளுக்கு கண்டனம் வெளியிட வேண்டுமென கோரியுள்ளது.
உங்கள் அரசியலமைப்புச் சட்டப்படி கடமைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியம் உள்ளது,” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“உங்கள் செயல்களுக்கான சட்டரீதியான நடவடிக்கைகளை ஈரான் எடுக்கும்,” என குறிப்பிட்டுள்ளது.
ஈரானில் அணுஇடங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இஸ்ரேல் தாக்குதல்களை அமைப்பு மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறது. ஆய்வாளர்கள் நாட்டில் இருக்கின்றனர், தேவையான இடங்களில் உடனடியாக செல்ல தயாராக உள்ளனர்,” என ஐக்கிய நாடுகளின் அணுஆயுத கண்காணிப்பு அமைப்பான IAEA (International Atomic Energy Agency) தலைவர் ரஃபெயல் கிரோஸ்ஸி தெரிவித்துள்ளார்.
அதேசமயம், “அணுஆலைகளை பாதுகாப்பாகவும், அமைதிக்கான நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில், தேவையான அனைத்து தரப்புகளுடனும் உடனடியாக சந்தித்து கலந்துரையாட தாம் தயாராக உள்ளதாக கிரோஸ்ஸி தெரிவித்துள்ளார்.
ஈரான் வெளியுறவு அமைச்சும் IAEA மீது கடும் விமர்சனம் செய்து, “ஈரானின் அணு திட்டம் குறித்து தவறான உணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறார்” என்றும், “இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு உடந்தையாக மாறியுள்ளார்” என்றும் குற்றம்சாட்டியுள்ளது.