சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதல்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என சிரிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 34 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல், தனது வலுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிரிய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ஜனாதிபதி மாளிகை அருகிலுள்ள பகுதிகளையும் இலக்காக்கியுள்ளது.
இது தற்போது சுவெய்தா (Suweida) பகுதியில் உரிமை கோரியும், தாக்குதலுக்கு உட்பட்டிருக்கும் ட்ரூஸ் சிறுபான்மைக் குழுவை பாதுகாப்பதற்கும் மற்றும் அவர்களை தாக்கும் அரச ஆதரவு படைகளைக் குறிவைப்பதற்கும் செயற்படும் நடவடிக்கையாகும் என இஸ்ரேல் இந்த தாக்குதல் பற்றி தெரிவித்துள்ளது.
, “சுவெய்தா பகுதியில் கடுமையாகச் செயற்படுகிறோம். அரச ஆதரவு அம்சங்களை குறிவைத்துத் தாக்குகிறோம். தாக்குதல்களின் அளவு மற்றும் வேகத்தையும் அதிகரித்து வருகிறோம்” என இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தாக்கப்பட்டதன் பின்னர், கட்டடத்தின் முன்பக்கப் பகுதி இடிந்து விழுந்துள்ளதாகவும், பாதுகாப்புப் படைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதால் சாலைப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பிரிட்டனில் உள்ள Syrian Observatory for Human Rights அமைப்பின் தகவலின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் மோதல்களில் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதர் டோம் பாரக், “எல்லா தரப்பினரும் வன்முறையில் இருந்து விடுபட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

