ஐரோப்பிய பிராந்திய வலயத்தின் அதிக புத்தாக்கம் கொண்ட நாடாக மீண்டும் சுவிட்சர்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் புத்தாக்க புள்ளி பட்டியல் Innovation Scoreboard 2025 அறிக்கையின் படி, சுவிட்சர்லாந்து எட்டாவது ஆண்டாகவும் ஐரோப்பாவில் புத்தாக்கம் மிக்க நாடு என்ற முதன்மை நிலையைத் தக்க வைத்திருக்கிறது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் மதிப்பெண் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சிறிதளவில் குறைந்தாலும், அந்த குறைவு முதலிடத்தை இழக்கும் அளவில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, “டிசைன் அப்ளிகேஷன்கள்” குறித்த குறிகாட்டியில் மதிப்பீடு குறைந்ததே, இந்த இடைவெளிக்கு காரணமாகும்.
ஆனால், வேகமான இணைய அணுகல் போன்ற துறைகளில் சுவிட்சர்லாந்து முன்னேற்றம் காட்டியுள்ளதாகவும், மேலும் ஐரோப்பாவின் மிக ஈர்க்கக்கூடிய ஆராய்ச்சி அமைப்பு சுவிட்சர்லாந்துக்கே சொந்தமானது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் ஐந்து நாடுகள்:
- சுவிட்சர்லாந்து
- ஸ்வீடன்
- டென்மார்க்
- நெதர்லாந்து
- ஐக்கிய இராச்சியம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்புநாடுகளும், அதற்குப்புறம் உள்ள 12 நாடுகளும் சேர்த்து மொத்தம் 39 நாடுகள் இந்த தரப்படுத்தலில் சேர்க்கப்பட்டுள்ளன. மொத்தம் 32 வகையான புத்தாக்க குறிகாட்டிகள் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளைத் தவிர, உலக அளவில் தென்கொரியா மிகச் சிறந்த புத்தாக்க நாடாக இடம் பிடித்துள்ளது.

