விமானத்தில் கதவை திறக்க முயன்ற பயணி ; விமானம் அவசரமாக தரையிறக்கம்

Must Read

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் டிட்ராய்ட்டு நோக்கிப் புறப்பட்ட ஸ்கை வெஸ்ட் SkyWest விமானத்தில் பயணித்த ஒருவர் நடுவானில் அவசர கதவை திறக்க முயற்சித்ததையடுத்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

குறித்த விமானம் அமெரிக்காவின் சீடர் ராபிட்ஸ் நகரில் தரையிறக்கப்பட்டுள்ளது.

SkyWest விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான 3612விமானம், ஒரு பயணியால் ஏற்பட்ட கடும் குழப்பம் காரணமாக தரையிறக்கப்பட்டுள்ளது என  அமெரிக்க வான் போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானம் தரையிறங்கியதும், ஓமஹா நகரைச் சேர்ந்த 23 வயதுடைய சமையல்கலைஞர் மாரியோ நிக்‌ப்ரெலாஜ் என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

அந்த விமானத்தில் மொத்தம் 67 பயணிகள் பயணம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

விமானம் ஓமஹாவிலிருந்து 5:30pm-க்கு புறப்பட்டு, சுமார் ஒரு மணி நேரத்தில் ஈஸ்டர் ஐயோவா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.