சுவிஸில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி

Must Read

சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் கிளாரஸ் மாகாணத்தில் இடம்பெற்ற சுவிஸ் மல்யுத்த  Swiss Wrestling and Alpine Festival விழாவின் அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நெட்சால் மற்றும் நாபெல்ஸ் இடையே, பகுதியில், 33 வயதான ஒருவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

இந்த கதவலை கிளாரஸ் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர் எதற்காக ரயில் பாதையில் சென்றார் என்பது இன்னும் தெரியவில்லை.

அந்தப் பகுதியில் சுமார் இரண்டு மீட்டர் உயரமான வேலி இருந்த போதிலும், அவர் எவ்வாறு பாதையை கடந்து உள்ளே சென்றார் என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவ நேரத்தில் ரயிலில் சுமார் 40 பயணிகள் இருந்தனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் அனைவரும் பராமரிப்பு குழுவினரால் பரிசோதிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தால் கிளாரஸ் பகுதியின் ரயில் சேவைகள் பல மணி நேரம் நிறுத்தப்பட்டதால், பல விழா பங்கேற்பாளர்கள் வீடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டதாக சுவிஸ் ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.