அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கத் தயார் – சுவிஸ்

Must Read

அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கத் தயார் என சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

கூகுள், மேட்டா போன்ற அமெரிக்காவின் பிரதான டிஜிட்டல் நிறுவனங்கள் சுவிட்சர்லாந்தில் செயல்பாடுகளை அமைத்தால் லாப வரிகளுக்கு விலக்கு அளிக்கத் தயார் என உள்ளுர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த ‘வரிச் சலுகை’ அமெரிக்கா ஸ்விட்சர்லாந்துக்கு விதித்துள்ள 39% சுங்க வரிக்கு எதிரான சூழலில் முன்வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் அமெரிக்க நீதிமன்றம், புதிய சுங்க வரியின் சில பிரிவுகள் சட்டவிரோதமானவை என தீர்ப்பளித்தாலும், இறுதி முடிவு உச்ச நீதிமன்றத்தின் கைகளில் உள்ளது.

இதேவேளை, அமெரிக்க அரசு டொனால்ட் டிரம்ப்பை சமாதானப்படுத்தும் முயற்சியாக சுவிஸ் அரசு இந்த யோசனையை ஆராய்கிறது.

ஐரோப்பிய நாடுகள் பல, டிஜிட்டல் சேவை வரி விதித்திருப்பது டிரம்ப்பின் அதிருப்திக்கு காரணமாக உள்ளது.

எனினும் சுவிட்சர்லாந்து அதனை பின்பற்றமாட்டோம் என வாஷிங்டனுக்கு வாக்குறுதி அளித்துள்ளது.

இதேவேளை, சுவிஸ் பாராளுமன்ற இடதுசாரிகள் இந்த நடவடிக்கையை எதிர்த்து விமர்சித்துள்ளன.

ஆனால் வலதுசாரிகள், வர்த்தக நெருக்கடியில் அரசு எடுத்துள்ள சரியான முடிவு எனக் கருதுகின்றனர்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.