ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நங்காஹார் மாகாணத்தில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர்களே அதிக அளவில் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தில் 800 பேருக்கு கொல்லப்பட்டதுடன் சுமார் 2500க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
சுமார் ஆறு ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதி அதாவது பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அருகாமையில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பதிவான நில நடுக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈரான் உடனடியாக மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது.
நிவாரண பொருட்கள் மருத்துவ உபகரணங்கள் என்பனவற்றை ஈரான் அனுப்பி வைத்துள்ளது.
நிலநடுக்கத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சிக்கி இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டாரஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பூரண ஆதரவினை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கம் காரணமாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் புதையுண்டு போனதாக ஆப்கானிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

