உக்ரன் போருக்கு மேற்கு நாடுகளே காரணம் – புடின்

Must Read

உக்ரனுடனான போருக்கு மேற்குலக நாடுகளே காரணம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

சீனாவின் தியான்ஜினில் திங்கட்கிழமை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் உரையாற்றிய போது அர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா போரைத் தொடங்கியது என்ற குற்றச்சாட்டை அவர்  மறுத்துள்ளார்.

“இந்த நெருக்கடி உக்ரைனில் மேற்கத்திய ஆதரவுடன் நிகழ்ந்த 2014 புரட்சியிலிருந்தே தோன்றியது” என அவர் சுட்டிக்காட்டினார்.

புடின், மேற்கத்திய நாடுகள் உக்ரைனை நேட்டோவில் இணைக்க முயன்றதே போரின் மூல காரணம் எனக் குறிப்பிட்டார்.

சமாதானம் நிலைக்க மூல காரணங்களைச் சரி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடனான ஆகஸ்ட் சந்திப்பு “சமாதானத்துக்கான பாதையைத் திறந்தது” என புடின் கூறியுள்ளார்.

அதேவேளை சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளையும் பாராட்டினார்.

இந்த மாநாட்டில் துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். மேற்கத்திய கூட்டணிகளுக்குப் பின்பற்றாக SCO முக்கிய பங்காற்றும் என புடின் வலியுறுத்தினார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.