ரஷ்யா மீது ஆழமான தாக்குதல் நடத்தப்படும் என உக்ரைன் எச்சரிக்கை

Must Read

ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலால் சுமார் 60,000 பேருக்கு மின்சாரம் தடைப்பட்டதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் உள்ளகப் பகுதிகளுக்கு ஆழமான தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

தனது இராணுவத் தலைமைத் தளபதி ஓலெக்சாண்டர் ஸிர்ஸ்கியுடன் நடத்திய சந்திப்புக்குப் பின், இந்தத் திட்டத்தை சமூக ஊடகமான X-ல் ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தினார்.

ரஷ்யா அண்மைய வாரங்களில் உக்ரைனின் எரிசக்தி மற்றும் போக்குவரத்து அமைப்புகளை குறிவைத்து கடும் தாக்குதல்கள் மேற்கொண்டு வருகிறது.

அதேவேளை, உக்ரைன் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் குழாய்களைத் தாக்கி வருகிறது.

சனிக்கிழமை இரவு, ரஷ்ய ட்ரோன்கள் ஓடேஸா மாகாணத்தில் உள்ள நான்கு எரிசக்தி நிலையங்களைத் தாக்கியதில், 29,000 பேர் மின்சாரம் இன்றி தவித்தனர்.

இந்த தாக்குதல்கள் கருங்கடல் துறைமுக நகரமான சோர்னோமோர்ஸ்க் அதிக பாதிப்புக்குள்ளானது.

இதற்கிடையில், ரஷ்ய பாதுகாப்புத்துறை உக்ரைன் அனுப்பிய 112 ட்ரோன்களை சுட்டுத் தள்ளியதாக தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியக் குழுத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், போலந்து-பெலாரஸ் எல்லையில் பேசியபோது, புடின் “இயற்கையில் வேட்டைக்காரன்” எனக் குறிப்பிட்டு, ஐரோப்பாவின் பாதுகாப்பை வலுப்படுத்த கூடுதல் நிதி வழங்கப்படும் என உறுதியளித்தார்.

இதேவேளை உக்ரைனின் சரணடைவின் மூலம் அமைதி ஏற்படுத்த முடியாது என ஜெர்மன் தெரிவித்துள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.