அமெரிக்காவின் சவுத் வெஸ்ட் விமானசேவை, தனது புதிய விமானங்களில் விமானிகள் காக்பிட் கதவை திறக்கும் போது பாதுகாக்கும் இரண்டாம் தடுப்புச்சுவர் (Secondary Barrier) அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த தடுப்பு, கதவு அல்லாது கேட் போன்ற அமைப்பாக இருக்கும். விமானிகள் கழிப்பறை போன்ற காரணங்களுக்காக காக்பிட் கதவை திறக்க வேண்டிய சமயங்களில் கூடுதல் பாதுகாப்பை அளிக்கும்.
முதன் முதலாக லேபர் டே வார இறுதிக்குள் இந்த வசதி கொண்ட போயிங் 737 விமானம் சேவையில் இணைக்கப்பட்டது.
இதனால் சவுத் வெஸ்ட், அமெரிக்காவில் இந்த புதிய பாதுகாப்பு முறையை பயன்படுத்தும் முதலாவது விமான நிறுவனங்களில் ஒன்றாகும்.
2023ஆம் ஆண்டு அமெரிக்க மத்திய விமான சேவை நிர்வாகம் Federal Aviation Administration (FAA) வெளியிட்ட விதிப்படி, 2024 கோடைக்குள் அனைத்து புதிய விமானங்களிலும் இந்த தடுப்பு கட்டாயமாக அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளுது.
ஆனால் சவுத் வெஸ்ட் விமான சேவை நிறுவனம் அதை ஒரு வருடம் முன்பே அமல்படுத்தியுள்ளது.
2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின் விமான தொழிற்சங்கங்கள், விமானிகள் பாதுகாப்பிற்காக இத்தகைய இரண்டாம் தடுப்பு அவசியம் என தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தன.
சவுத் வெஸ்ட் விமான சேவை ஒவ்வொரு புதிய விமானமும் இப்போது இந்த தடுப்புடன் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பை மேம்படுத்த எப்போதும் முன்முயற்சி எடுப்பது எங்கள் கொள்கை என்று தெரிவித்துள்ளது.
இப்போது விமானங்களில், விமானிகள் கதவை திறக்கும் போது பானம் வழங்கும் வண்டியை வழி மறைக்க பயன்படுத்துவதே நடைமுறையாக உள்ளது.

