கிம் ஜாங் உன் சீனாவில் நடைபெறும் “விக்டரி டே” ராணுவ பேரணியில் பங்கேற்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா ஜனாதிபதி ஸி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட உலக தலைவர்களை வடகொரிய அதிபர் சந்திக்க உள்ளார்.
கிம், அர்மர் ரயிலில் செவ்வாய்க்கிழமை சீனா பயணம் செய்துள்ளார். உணவக வசதி காணபப்டும் இந்த ரயில் பாதுகாப்பு காரணமாக இது மெதுவாக பயணம் செய்கிறது.
1959 முதல் எந்த வட கொரிய தலைவரும் சீன ராணுவ பேரணியில் கலந்துகொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிம் உட்பட 26 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர் என்பதுடன் இதில் மியான்மார், ஈரான் மற்றும் கியூபா போன்ற நாடுகளின் தலைவர்கள் உள்ளடங்குகின்றனர்.
பீஜிங்கில் தியான்மேன் சதுக்கம் வழியாக பல ஆயிரம் ராணுவத் தலைவர்கள் பங்கேற்கும் அணிவகுப்பில் கிம் பங்கேற்க உள்ளார். பேரணி 70 நிமிடங்கள் நடைபெறவுள்ளது. இதில் சீனாவின் புதிய ஆயுதங்கள், விமானங்கள், டாங்குகள் மற்றும் எதிரி ட்ரோன் அமைப்புகள் முழுமையாக காட்சியளிக்கப்படும்.
மேற்கு நாடுகள் பெரும்பாலும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கிம் ஜாங் உன் அண்மையில் உலக தலைவர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் மேற்கொண்ட பின்னர் அவர் புடினை இருமுறை சந்தித்துள்ளார். கடந்த 2019-ல் கிம், இரு நாடுகளின் தூதரக உறவுகளின் 70வது ஆண்டு விழாவில் பீஜிங்கிற்கு ரயிலில் பயணம் செய்திருந்தார்.

