சீனா பீஜிங்கில் நடைபெற்ற மாபெரும் இராணுவ அணிவகுப்பில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உலகம் இன்று “சமாதானம் அல்லது போர்” என்ற தேர்வின் முன் நிற்கிறது என எச்சரித்துள்ளார்.
சீன ஜனாதிபதியின் அருகில் இருபுறங்களிலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் அமர்ந்திருந்தது வரலாற்றில் முதன்முறையாகும்.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியடைந்ததற்கான 80ஆவது ஆண்டை நினைவுகூரும் நிகழ்வில் மேற்கத்திய தலைவர்கள் பெரும்பாலும் புறக்கணித்த நிலையில், புதினும் கிம்மும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இன்று மனிதகுலம் சமாதானமா அல்லது போரா, உரையாடலா அல்லது மோதலா, இருபுற வெற்றியா அல்லது பூஜ்ய கூட்டுத்தொகையா என்பதை தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில் உள்ளது என ஷி ஜின்பிங், குறிப்பிட்டார்.
50,000க்கும் மேற்பட்ட மக்களை நோக்கி அவர் இவவ்ர்ற உரையாற்றியிருந்தார்.
புதுமையான ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், நீருக்கடியில் இயங்கும் ட்ரோன்கள், ரோபோட் ஓநாய் ஆயுதங்கள் உள்ளிட்ட அதி நவீன ராணுவ உபகரணங்களை பார்வையிட்டார்.
பின்னர் 80,000 “சமாதானப் பறவைகள்” வானில் விடப்பட்டன.
சீனாவின் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் நடந்த அணிவகுப்பில் 25க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
அந்நிகழ்வின் மூலம் சீனா, புதின், கிம் ஆகியோர் பொதுவாக ஒரே மேடையில் தோன்றிய முதல் முறை அமைந்தது.
பின்னர், புதின் தனது வீரத்துடன் உக்ரைன் போரில் போராடும் சிப்பாய்களுக்கு நன்றி தெரிவித்து கிம்முடன் இருதரப்பு சந்திப்பும் நடத்தினார். கிம், ரஷ்யாவுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன் Truth Social பதிவில், அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் சீனாவை ஜப்பானிடமிருந்து விடுதலை செய்ய உதவியதைக் குறிப்பிட்டு, “புதினுக்கும் கிம்முக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்திடுங்கள், நீங்கள் அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்யும்போது” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் வடகொரியாவுடனும், ரஷ்யாவுடனும் பாதுகாப்பு ஒப்பந்தங்களை கையெழுத்திட்ட நிலையில், இந்த அணிவகுப்பு மூவரும் பாதுகாப்பு கூட்டணியை வலுப்படுத்துவார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அதேவேளை, கடந்த இரண்டு ஆண்டுகளில் சீன இராணுவத்தில் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையால் பல ஜெனரல்கள் நீக்கப்பட்டிருந்தாலும், இந்த அணிவகுப்பு சீனாவின் இராணுவ நவீனமயமாக்கலில் அடைந்த முன்னேற்றத்தை உலகிற்கு காட்டும் நோக்கில் நடந்ததாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சீனாவின் மீளுருவாக்கம் தடுக்க முடியாதது” என்று தனது உரையை முடித்த ஷி ஜின்பிங், நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு அணிவகுப்பு குறித்து தங்கள் அனுபவங்களை எழுதிக்கொடுக்க”உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

