எதிர்க்கட்சிகளை அடக்குமுறைக்கு உட்படுத்த வேண்டாம்

Must Read

எதிர்க்கட்சிகளை அடக்குமுறைக்கு உட்படுத்த வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச பிரகடனத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒடுக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் ஜனநாயகத்தையும் மக்களையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த ஐ.சீ.சீ.பீ.ஆர். சட்டம் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பிரதிநிதிகளை இன்று சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐ.சீ.சீ.பீ.ஆர். சட்டத்தை பயன்படுத்தி உதய கம்மன்பிலவை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

அரசாங்கம் எதிர்க்கட்சிகளை அடக்குமறைக்கு உட்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவதனை தவிர்க்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.