இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு கரையின் எந்தப் பகுதியையும் இஸ்ரேல் இணைத்துக்கொண்டால், அது எல்லை மீறலாக நோக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அவ்வாறு செய்தால் அது பிராந்திய ஒருங்கிணைப்பு முயற்சிகளை முடிவுக்குக் கொண்டு வந்து விடும் என தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளியுறவு அமைச்சின் அரசியல் விவகார உதவி அமைச்சர் லானா நுசைபெ இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைப்பது, ஆபிரகாம் ஒப்பந்தத்தின் (Abraham Accords) ஆன்மாவை முற்றிலும் பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.
இரு நாடுகள் அமைதியுடன் வாழ வேண்டும் என்ற சர்வதேச ஒப்புமையை இது சிதைக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
26 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 2020ம் ஆண்டில் ஐக்கிய அரபு இராச்சியம், இஸ்ரேலுடன் உறவை வழமைப்படுத்திய முதல் அரபு நாடாகும்.
அதன் பின் பஹ்ரைன், மொராக்கோ ஆகியவை ஒப்பந்தத்தில் இணைந்தன. இதன் மூலம் வர்த்தகம், பாதுகாப்பு, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் நெருக்கம் அதிகரித்தது.
பாலஸ்தீனர்களின் சுயாட்சி நாடு கனவிற்கு எப்போதும் ஆதரவாக இருந்தோம், இன்னும் அதே நிலைப்பாடு தொடர்கிறது” என லானா நுசைபெ வலியுறுத்தினார்.
இந்நிலையில், நெதன்யாகு அரசு மேற்கு கரையோரத்தில் பகுதி இணைப்புத் திட்டங்களைப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

