அமெரிக்கா பயணம் செய்யும் வெளிநாட்டவருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

Must Read

அமெரிக்காவிற்கு விசா விலக்கு திட்டத்தில் (Visa Waiver Program) உள்ள 40-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகள், செப்டம்பர் 30 முதல் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

இதற்காகப் பயன்படுத்தப்படும் பயண அனுமதி முறைமைக்கான இலத்திரனியல் ESTA விண்ணப்பக் கட்டணம் தற்போது 21 அமெரிக்க டாலராக இருந்தது. இது 40 டாலராக இரட்டிப்பு உயர்த்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள கத்தார் போன்ற நாடுகள் இதில் உள்ளடங்குகின்றன.

  • I-94 வருகை/பிரிவு பதிவு கட்டணம் 6 டொலரிலிருந்து 30 டொலராக உயர்வு.
  • சீன பயணிகள் இலத்திரனியல் வீசா இற்றைப்படுத்தல் முறைமை EVUS கட்டணம் 30 டொலராக நிர்ணயம்.
  • விரைவில், விசா விலக்கு திட்டத்தில் இல்லாத பல நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு 250 டொலர்  “visa integrity fee” அறவிடப்படும் என அறிவிப்பு.

இதற்கிடையில், உலக சுற்றுலா மற்றும் பயணக் கவுன்சில் (WTTC) தெரிவித்ததாவது, 2025-ஆம் ஆண்டில் அமெரிக்கா 12.5 பில்லியன் சர்வதேச பயணச் செலவினத்தை இழக்கப்போகும் ஒரே நாடு என கணிக்கப்பட்டுள்ளது.

பல கனடியர்களும், அமெரிக்காவுக்குச் செல்லும் பிற சர்வதேச சுற்றுலாப் பயணிகளும் தங்களின் பயணத்தை தவிர்த்து வருகின்றனர்.

உலக சுற்றுலா மற்றும் பயணக் கவுன்சில் (World Travel and Tourism Council) மே மாதத்தில் வெளியிட்ட கணிப்பின்படி, 2025 ஆம் ஆண்டில் அமெரிக்கா சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் செலவினத்தில் 12.5 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை சந்திக்கப்போகிறது.

கவுன்சில் ஆய்வு செய்த 184 நாடுகளில், இவ்வாண்டு வீழ்ச்சி காணப்போகும் ஒரே நாடு அமெரிக்காதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.