சுவிஸில் உணவுப் பழக்க வழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Must Read

சுவிட்சர்லாந்தில் உணவுப் பழக்க வழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் மருத்துவர்களும் அதிகாரிகளும் கவலை வெளியிட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் விரைவுணவு (ஃபாஸ்ட்-புட்) உணவகங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்தப் போக்கு விரைவில் மாறும் நிலையில் தெரியவில்லை எனவும் இதனால் மக்களின் உணவுப் பழக்கவழக்கம் மற்றும் உடல்நலம் குறித்து அதிகாரிகளும் மருத்துவர்களும் கடுமையாக கவலை தெரிவித்துள்ளனர்.

15% குழந்தைகள் மற்றும் 43% பெரியவர்கள் அதிக எடை அல்லது பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர் (Federal Food Safety and Veterinary Office – FSVO).

இதனுடன் இதய நோய், நீரிழிவு, புற்றுநோய் அபாயங்களும் அதிகரிக்கின்றன.

 மருத்துவர்களின் எச்சரிக்கை:

அமெரிக்காவில் அதிக ஃபாஸ்ட்-புட் கடைகள் இருப்பதுடன், பருமன் விகிதமும் மிக அதிகம். உணவுச் சூழல் மிகப் பெரிய பங்காற்றுகிறது என ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனையின் அதிக எடை சிகிச்சை பிரிவின் தலைவர் ஜார்ஜ் கொரெயா குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்களை குறிவைத்து விளம்பரங்கள் நடத்தப்படுகின்றன – குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள், சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் போன்ற வழிகள் பயன்படுத்தப்படுகின்றன.

பிரான்ஸ் போன்ற நாடுகள் இதுபோன்ற விளம்பரங்களை கட்டுப்படுத்த சட்டங்களை வகுத்துள்ளன.

 சுவிட்சர்லாந்தில் தற்போது “தன்னார்வ அடிப்படையிலான கட்டுப்பாடு” மட்டுமே உள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.