பாலியல் குற்றச் செயல் தொடர்பில் ட்ரம்பிற்கு வழங்கப்பட்ட தண்டனை

Must Read

பாலியல் குற்றச் செயல் ஒன்று தொடர்பில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை மேல் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

ட்ரம்புக்கு எதிரான 83.3 மில்லியன் டொலர் இழப்பீடு தீர்ப்பை இவ்வாறு மேல் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

ட்ரம்ப் மீது பெண் எழுத்தாளர் இ. ஜீன் கேரோல் (E. Jean Carroll) தாக்கல் செய்த மனநஷ்ட வழக்கில் வழங்கப்பட்ட 83.3 மில்லியன் டொலர் இழப்பீடு தீர்ப்பை இரண்டாம் சுற்று மேல் நீதிமன்றம் திங்கட்கிழமை நிராகரிக்க மறுத்தது.

81 வயதான கேரோல், முன்னாள் எலி Elle இதழ் பத்தி எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

1996-ஆம் ஆண்டு ட்ரம்ப் தன்னை நியூயார்க் நகரில் உள்ள பெர்க்டார்ப் குட்மான் Bergdorf Goodman விற்பனையகத்தில் ஆடை மாற்றும் அறையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினார் என கேரோல் குற்றம்சாட்டினார்.

ட்ரம்ப் 2019-ல் இதை மறுத்து, கேரோல் “என் வகை அல்ல” என்று கூறியதோடு, அவர் புத்தகம் விற்கும் நோக்கில் கதை கற்பனை செய்தார் என குறிப்பிட்டார்.

இந்த கருத்துகள் அவரது தொழிலுக்கும், தனிப்பட்ட வாழ்வுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதாக கேரோல் வழக்கு தொடர்ந்தார்.

2024 ஜனவரியில் நடுவர் குழு ட்ரம்ப் கேரோலின் நன்மதிப்பிற்கும் மனஉளைச்சலுக்கும் சேதம் விளைவித்ததாக தீர்மானித்து அபராதம் விதித்திருந்தது.

ஜனாதிபதி பதவியில் இருந்தபோது அளித்த கருத்துகளுக்கு சட்ட ரீதியான விலக்கு உண்டு என்றும், உச்ச நீதிமன்றம் 2024-இல் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தன்னை இந்நிலைத் தீர்ப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் ட்ரம்ப் சட்டத்தரணிகள் ஊடாக வாதிட்டார்.

ஆனால், மேல் நீதிமன்றம் அதை நிராகரித்து, “மாவட்ட நீதிமன்றமும் நடுவர் குழுவும் எடுத்த தீர்ப்பு முறையாகவே இருந்தது” எனத் தெரிவித்தது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.