ஊழல் எதிர்ப்பு போராட்டத்தின்  எதிரொலி நேபாள பிரதமர் பதவி விலகினார்

Must Read

நேபாளத்தில் பல மாதங்களாக நீடித்து வந்த ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சமூக ஊடகத் தடையை அடுத்து நேபாளத்தில் வன்முறையாக வெடித்தது.

இதில் 19 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மக்கள் எதிர்ப்பை கட்டுப்படுத்த முடியாமல் பிரதமர் பதவி விலகினார்.

ஒலி தலைமையிலான அரசு கடந்த வாரம் சமூக ஊடகத் தடை விதித்தது.

இதற்கு எதிராக திங்கட்கிழமை நடந்த ஆர்ப்பாட்டங்களில் காவல்துறை கண்ணீர் புகை, ரப்பர் குண்டு பிரயோகம் செய்தது.

போராட்டங்களினால் 19 பேர் உயிரிழந்தனர், மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து அரசு சமூக ஊடகங்களுக்கான தடையை நீக்கியது.

“நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அரசியல் தீர்வு கிடைக்க உதவுவதற்காக நான் இன்று முதல் பதவி விலகுகிறேன்” என்று ஒலி தனது ராஜினாமா கடிதத்தில் ஜனாதிபதி ராம் சந்திர பௌடேல் அவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ராஜினாமாவை ஏற்று, புதிய பிரதமரை நியமிக்கும் ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளார்.

முடிவற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், ஆயிரக்கணக்கானோர் காத்மாண்டுவில் பாராளுமன்ற வளாகம் மற்றும் பல இடங்களில் திரண்டனர்.

போராட்டக்காரர்கள் டயர்கள் எரித்தனர், காவலர்களைத் தாக்கினர், சிலர் அமைச்சர்களின் வீடுகளுக்கும் தீ வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேபாளத்தின் காத்மாண்டு சர்வதேச விமான நிலையமும் போராட்ட தீ மற்றும் புகையால் உடனடியாக மூடப்பட்டது.

2008ல் மன்னராட்சியை ஒழித்த பிறகு நேபாளத்தில் ஏற்பட்ட மிக மோசமான அரசியல் நெருக்கடி என அரசியல் விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.