கத்தாரின் தலைநகர் தோஹாவில் இன்று இடம்பெற்ற தாக்குதல்களினால் கத்தார் எயார்வேஸ் தனது விமான சேவைகள் எந்தவித பாதிப்பும் அடையவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) கணக்கில் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவங்களால் விமானப் பயணங்களில் இடையூறு எதுவும் ஏற்படவில்லை என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
“எங்கள் பயணிகளின் பாதுகாப்பும், பாதுகாப்பு உணர்வும் எப்போதும் எங்கள் முதல் முன்னுரிமையாக இருந்துள்ளது மற்றும் இருக்கும்,” என கத்தார் ஏர்வேஸ் வலியுறுத்தியுள்ளது.
இன்றைய தினம் கட்டாரின் தோஹாவின் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியிருந்தது.
ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டிருந்தது.

