முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்வது தொடர்பில் நீதிமன்றம் அதிரடித் தீா்ப்பு

Must Read

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்வது தொடர்பில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜனாதிபதிகளின் உரிமைகள் ரத்து செய்வது தொடர்பான மசோதாவின் எந்த விதிமுறையும் அரசியலமைப்பிற்கு முரணாக இல்லை என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதை இன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்தார்.

இந்த மசோதாவை சாதாரண பெரும்பான்மையால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என்று உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது என சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

இதனால், ஜனாதிபதிகளின் சில உரிமைகள் நீக்கப்படும் இந்த மசோதா, விரைவில் நிறைவேற்றப்படும் வாய்ப்பு உள்ளது.

இதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களின் அதிகாரபூர்வ இல்லங்கள் அனைத்து அரசாங்கம் பொறுப்பெற்றுக் கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே விரைவில் மஹிந்த ராஜபக்ச தனது விஜேராம இல்லத்திலிருந்து வெளியேற நேரிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.