லண்டன் விமான நிலையத்தில் ஏற்பட்ட சம்பவத்தில் 20 பேர் காயம்

Must Read

லண்டனின் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் ஆபத்தான ரசாயன பொருள் கசிவு தொடர்பில் பதிவான போலி செய்தியினால் ஏற்பட்ட நெரிசல்களினால் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

லண்டனின் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் டெர்மினல் 4 சேக்-இன் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டு அங்கிருந்தவர்கள் அகற்றப்பட்டனர்.

ஆனால், எந்தவித ஆபத்தான பொருட்களும் இல்லை என்று மெட்ரோபாலிட்டன் பொலிஸ் உறுதி செய்துள்ளது.

இந்த சமப்வத்தில் சுமார் 20 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. யாருக்கும் உயிருக்கு ஆபத்தான நிலை இல்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லண்டன் தீயணைப்பு படை அழைக்கப்பட்டு, மூன்று நிலையங்களிலிருந்து குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

சிறப்பு அதிகாரிகள், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்..

மொத்தமாக 21 பயணிகள் சிகிச்சை பெற்றனர், அதில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவத்தின் காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது. முன்னெச்சரிக்கையாக டெர்மினல் 4 காலி செய்யப்பட்டது என தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

டெர்மினல் 4 மீண்டும் பாதுகாப்பானது என்று அவசர சேவைகள் உறுதிப்படுத்தியுள்ளன. அனைத்து விமானங்களும் திட்டமிட்டபடி புறப்படுவதை உறுதிசெய்வோம். ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிக்கவும். பயணிகளின் பாதுகாப்பும் எங்கள் பணியாளர்களின் பாதுகாப்பும் எங்கள் முதல் முன்னுரிமை என ஹீத்ரோ விமான நிலையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அண்மைய சம்பவம் பெரிய அபாயமின்றி முடிந்தாலும், ஹீத்ரோவில் மீண்டும் மீண்டும் ஏற்படும் தடங்கல்கள் குறித்து பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.