நேபாளத்திற்கான சகல விமான சேவைகளையும் இடைநிறுத்தியதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
காத்துமாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டதால் நேபாளுக்கு செல்லும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
விமான சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை செயல்படாது எனவும், பயணிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வழிகளைப் பார்த்து புதுப்பிப்புகளை தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேபாளத்தில் இடம்பெற்று வரும் கடுமையான போராட்டங்கள் காரணமாக பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.

