முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் நீக்கப்பட்ட சட்டமசோதா –நிறைவேற்றம்

Must Read

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை நீக்குவதற்கான சட்டமசோதா இன்று பாராளுமன்றத்தில் 151 வாக்குகள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சியிலிருந்து ஒரு வாக்கு மட்டுமே எதிராக வந்தது.

இந்த சட்டமசோதா அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்றும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்மானித்ததை நேற்று சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்தார்.

புதிய சட்டத்தின் கீழ், 1986 ஆம் ஆண்டு எண் 4 ஆக பிரசுரிக்கப்பட்டஜனாதிபதிகளின் சலுகைகள் சட்டம்நீக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி அல்லது அவர்களின் மனைவிக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ வீடு அல்லது மாதாந்திர கொடுப்பனவுகள்,

செயலாளர் கொடுப்பனவு, அதிகாரப்பூர்வ வாகனங்கள் மற்றும் பிற வசதிகள்,

முன்னாள் ஜனாதிபதிகளின் மனைவிக்கு வழங்கப்பட்ட மாதாந்திர ஓய்வூதியம்

இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால், தற்போது உயிருடன் இருக்கும் முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் அனைத்து சலுகைகளும் நீக்கப்படும்.

மேலும், மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் மனைவி ஹேமா பிரேமதாசாவுக்கும் இதன் பாதிப்பு ஏற்படக்கூடும்.

தேசிய மக்கள்ச சக்தி, ஜனாதிபதி தேர்தலின்போது மக்களிடம் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், ஜனாதிபதிகளின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவையற்ற சலுகைகளை குறைக்கும் நடவடிக்கையாக இந்த சட்டமசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சட்ட மூலத்திற்கு சபாநாயகர் தனது ஒப்புதல் கையொப்பத்தை இட்டுள்ளதாக நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.