இஸ்ரேல் பிரதமர் அரச பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக கத்தார் பிரதமர் ஷேக் முகம்மது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி குற்றம் சுமத்தியுள்ளார்.
தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து நடத்திய இஸ்ரேலின் படுகொலை முயற்சியை “கொடூரமானது, என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாங்கள் நாகரிகமான மக்களுடன் பேசுகிறோம் என நினைத்தோம். ஆனால் நேதன்யாஹு எடுத்த இந்த நடவடிக்கை வார்த்தைகளில் சொல்ல முடியாத கொடூரமான செயல் எனவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் காசாவில் சிறையில் உள்ள பணயக் கைதிகளுக்கு இருந்த நம்பிக்கையையும் அழித்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதலில், 22 வயது கத்தார் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
ஹமாஸ் தெரிவித்தபடி, ஐந்து உறுப்பினர்கள் கொல்லப்பட்டாலும் முக்கிய பேச்சுவார்த்தை பிரதிநிதி உயிர் தப்பியுள்ளார்.
ஹமாஸ் தலைமை பேச்சுவார்த்தையாளர் கலீல் அல்-ஹய்யாவின் நிலை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
நாங்கள் துரோகம் செய்யப்பட்டோம். எங்கள் கோபத்தை சொற்களால் விவரிக்க முடியாது. நேதன்யாஹு எடுத்த இந்த நடவடிக்கை அமைதி வாய்ப்பையே அழித்துவிட்டது என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
கத்தார் இனி நடுநிலைமை முயற்சிகளை மீள்பரிசீலனை செய்து கொண்டிருப்பதாகவும், இஸ்ரேல் “நேரத்தை வீணாக்கி வந்தது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

