மஹிந்த விஜேராம இல்லத்தை விட்டு வெளியேறினார்

Must Read

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு சற்று முன்னர் வெளியேறியுள்ளார்.

இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ நீண்ட காலமாக கொழும்பு விஜயராம வீதியில் அமைந்துள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தில் வசித்து வந்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் நேற்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சிறப்பு உரிமைகளை ரத்து செய்யும் விசேட சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 151 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன.

இதன் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள் தங்களது அதிகாரப்பூர்வ இல்லங்களை அரசாங்கத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என ஒப்படைக்க வேண்டிய அவசியம் எழுந்திருந்தது.

இதன் அடிப்படையில் குறித்த சட்டமூலத்திற்கு அமைவாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீட்டை விட்டு வெளியேறியதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று காலை சீன தூதுவர் ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்திருந்தார்.

சீன தூதுவர் தாவிர பௌத்தப்பிக்குகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மஹிந்தவை அவரது இல்லத்தில் இன்று காலை முதல் சந்தித்து வந்தனர் என்பதே குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஒரு பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷ தனது அதிகாரபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், வீட்டை முழுமையாக ஒப்படைப்பதற்கு இன்னும் ஒரு வார கால அவகாசம் கோரி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது அதிகாரபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி ஹொரகொல்ல வீட்டுக்கு செல்ல உள்ளதாக அவரது அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.