இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Must Read

2025 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் குவாண்டம் இயற்பியலில் (Quantum Mechanics) புரட்சிகரமான கண்டுபிடிப்புகளை செய்ததற்காக கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

ஜான் கிளார்க் (John Clarke), மிசேல் டெவொரெட் (Michel Devoret) மற்றும் ஜான் மார்டினிஸ் (John Martinis) ஆகியோருக்கு “மெக்ரோ அளவில் குவாண்டம் டனலிங் மற்றும் மின்சுற்றில் சக்தி அளவீட்டின் (energy quantization) கண்டுபிடிப்புக்காக” பரிசு வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

குழுவின் அறிக்கையில், இம்மூவர் “குவாண்டம் உலகின் விசித்திர பண்புகளை கைகளில் பிடிக்கக்கூடிய அளவில் காண்பித்துள்ளனர்” எனப் பாராட்டப்பட்டது.

“இந்த ஆராய்ச்சி ஒரு நோபல் பரிசுக்கு வழிவகுக்கும் என எங்களுக்கு ஒருபோதும் தோன்றவில்லை. நான் முழுமையாக அதிர்ச்சியடைந்துள்ளேன்,” என ஜான் கிளார்க், செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது தெரிவித்தார்.

குவாண்டம் இயற்பியல் என்பது அணு அல்லது அதற்கு குறைந்த அளவிலான பொருள் மற்றும் ஆற்றலின் நடத்தையைக் குறிக்கிறது.

இதில் “டனலிங் (tunnelling)” எனப்படும் நிகழ்வின் மூலம் ஒரு துகளம் ஒரு தடையை நேரடியாக ஊடுருவிச் செல்ல முடியும்.

ஆனால், பெரிய அளவிலான பொருட்களுக்கு இது சாத்தியமில்லை என கருதப்பட்ட நிலையில், இம்மூவர் 1984–1985 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட சூப்பர் கண்டக்டிங் மின்சுற்று (superconducting circuit) சோதனைகளில், இந்த குவாண்டம் டனலிங் பெரிய அளவிலும் நிகழ முடியும் என்பதை நிரூபித்தனர்.

“கிளார்க், டெவொரெட், மார்டினிஸ் ஆகியோரின் ஆராய்ச்சிகள், குவாண்டம் இயற்பியல் பெரிய அளவிலும் பொருந்தும் என்பதை நிரூபித்தன,” லெஜெட் கூறியுள்ளார்.

கிளார்க், தமது கண்டுபிடிப்புகள் இன்று செல் போன், கேமரா, ஒளி நார் (fiber optic) போன்ற நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு அடித்தளமாயிருந்ததாகக் கூறினார்.

நோபல் குழுவும், “இன்றைய எந்த நவீன தொழில்நுட்பமும் குவாண்டம் இயற்பியலை சார்ந்தது — மொபைல் போன்களிலிருந்து ஒளிநார் கேபிள்கள் வரை அனைத்திலும் அதன் தாக்கம் உள்ளது,” என்று தெரிவித்தது.

இந்த ஆண்டு வழங்கப்படும் நோபல் பரிசின் தொகை 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனார் (சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.