வடகொரியாவின் ஆளும் கட்சியான தொழிற்கட்சியின் 80ம் ஆண்டு நிறைவு விழாவில் அதி நவீன புதிய ஏவுகணை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
வடகொரியாவின் ப்யாங்யாங்கில் (Pyongyang) நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் இந்த நீண்ட தூர ஏவுகணை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அணிவகுப்விற்கு வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் (Kim Jong Un) தலைமையேற்றார்.
இந்த அணிவகுப்பில் வடகொரியாவின் நீண்டதூர ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் “ஹ்வாசோங்-20” (Hwasong-20) எனப்படும் புதிய ஏவுகணை அனைவரினதும் கவனத்தை ஈர்த்திருந்தது.
11 அச்சுகள் கொண்ட மிகப்பெரிய லாரியில் ஏற்றப்பட்டு வெளியிடப்பட்ட இந்த ஏவுகணை, சமீபத்தில் வடகொரியா பரிசோதித்த புதிய கார்பன் ஃபைபர் அடிப்படையிலான திண்ம எரிபொருள் ராக்கெட் இன்ஜினால் இயக்கப்படுகிறது.
அது 1,971 கிலோநியூட்டன் தள்ளும் சக்தி (thrust) உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது, இது முந்தைய என்ஜின்களைவிட பல மடங்கு சக்திவாய்ந்ததாகும்.
ஹ்வாசோங்-20 வடகொரியாவின் நீள தூர அணு ஆயுத திறனின் உச்சநிலையாகும். இதன் பரிசோதனை இந்த ஆண்டின் முடிவுக்கு முன்னர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.”
இன்று நாங்கள் எந்தத் தடையையும் கடக்கக் கூடிய வலிமையான மக்களாக உலகின் முன் நிற்கிறோம்
என வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் கூறியுள்ளார்.
மேலும் வடகொரியா “சோசலிச சக்திகளின் உண்மையான அங்கத்தினராகவும், மேற்கத்திய ஆதிக்கத்துக்கு எதிரான சுதந்திரத்தின் கோட்டையாகவும்” இருப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

