சுவிட்சர்லாந்தின் பேர்ன் புகையிரத நிலைய பகுதியில் காசா போரை எதிர்த்து இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.
இந்த போராட்டத்தில் சுமார் இரண்டாயிரம் பேர் வரையில் பங்கேற்றிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களில் இருந்து வரும் பாலஸ்தீன அதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
இந்த போராட்டம் கறித்த அறிவிப்பினைத் தொடர்ந்து பாரியளவில் பொலிஸார் குறித்த பகுதியில் கடமையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.
புகையிரத நிலையம் அருகே போக்குவரத்து பகுதி முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது, பாதுகாப்பு காரணமாக சில சாலைகள் மூடப்பட்டன.
பேர்ன் பழைய நகரிலும், மற்ற கான்டன் பொலிஸ் உத்தியோகத்தர்களும் களத்தில் சேர்ந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை என நகராட்சி நிர்வாகம் குற்றம் சுமத்தியுள்ளது.
நகராட்சி கடந்த வாரம் பொதுமக்களை அறிவித்து, அனுமதி இல்லாத ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என அறிவித்திருந்தது.
எனினும் இந்த அறிவுறுத்தல்களை மீறி அதிக எண்ணிக்கையிலானர்கள் குழுமியிருந்தனர்.
பொலிஸார் ஏற்படுத்தியிருந்த பாதுகாப்பு தடைகளை போராட்டக்காரர்கள் உடைக்க முயன்ற போது பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டது.
பொலிஸாரை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன் சில கட்டிடங்களில் தீப்பற்றிக்காண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்கள் Federal Square பகுதியை விட்டு விலக வேண்டும். பங்கேற்பாளர்கள் அங்கு தங்கி இருக்க கட்டளை வழங்கப்பட்டுள்ளது. மேலதிக நகர்வுகள் அனுமதிக்கப்படாது அறிவிக்கப்பட்டது.
இந்த போராட்டம் காரணமாக சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் நிலையத்தை அண்டிய பாதைகளை பொலிஸார் மூடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிறிய அடிப்படைவாத குழுவொன்று நகரின் மையப் பகுதியில் இவ்வாறு கலகம் விளைவிப்பதனை ஏற்க முடியாது என சுவிட்சர்லாந்து எப்.டி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த சம்பவத்தின் போது மக்கள் தரப்பிலும் பொலிஸார் தரப்பிலும் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டனவா என்பது குறித்தும் எவரும் கைது செய்யப்பட்டனரா என்பது குறித்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.

