ஆடைகளை ட்ரை கிளீன் செய்பவர்கள் கவனத்திற்கு

Must Read

ஆடைகளை ட்ரை கிளீன் (Dry Cleaning) செய்யும் நிலையங்களில் பொதுவாக பயன்படுத்தப்படும் டெட்ராக்ளோரோஎத்திலீன் (Tetrachloroethylene – PCE) என்ற இரசாயனம் ஈரல் சேதத்தை மும்மடங்கு அதிகரிக்கும் அபாயமுள்ளது என்று புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

இந்த சேதம் காலப்போக்கில் ஈரல் புற்றுநோய் மற்றும் ஈரல் செயலிழப்பு வரை செல்லக்கூடியது.

2024 ஆம் ஆண்டு, அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (EPA), புற்றுநோய் மற்றும் பல தீவிர உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புள்ளதாக கண்டறியப்பட்டதால் PCE பயன்பாட்டை கட்டுப்படுத்தும் இறுதி விதிகளை வெளியிட்டது.

இந்த இரசாயனம் ‘மனிதர்களுக்கு வாய்ப்புள்ள புற்றுநோய் உண்டாக்கி’ என வகைப்படுத்தப்பட்டது

வல்லுநர்களின் கூற்றுப்படி, உலர்த்துவும் துணிகளை அணிவதால் மட்டும் அல்லாமல், காற்று மற்றும் நீர் மாசுபாடு வழியாக நிகழும் PCE உட்புகுதல் தான் மிகப்பெரிய ஆபத்து.

PCE மூலம் அதிகரிக்கும் ஆபத்து MASLD (Metabolic Dysfunction-Associated Steatotic Liver Disease) எனப்படும் நிலை.

இது ஈரலில் கொழுப்பு சேர்ந்து உருவாகும் அழற்சியைத் தொடர்ந்து:

  • எரிச்சல் (Inflammation)
  • ஈரல் சுருக்கம் / fibrosis
  • Cirrhosis, ஈரல் செயலிழப்பு, ஈரல் புற்றுநோய் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

புகைபிடித்தல், மதுபானம், நீண்டகால மருந்துப் பயன்பாடு, அதிக உடல் எடை ஆகியவை MASLD-க்கான காரணிகளாக உள்ளன.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.