சுவிஸ் மீதான வரியை 15 வீதமாக குறைக்கும் அமெரிக்கா

Must Read

சுவிட்சர்லாந்து மீதான வரியை அமெரிக்கா பாரியளவில் குறைக்கப்பட உள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா விதித்து வந்த 39% சுங்கவரி, 15% ஆக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த செயற்பாட்டுக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்க்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து அரசாங்கம் இது தொடர்பில் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது.

சுங்க வரி தொடர்பில் அமெரிக்காவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்படும் அளவே சுவிட்சர்லாந்திற்கும் சுங்க வரி அறவீடு செய்யப்பட உள்ளது.

சுவிட்சர்லாந்தின் பொருளாதார அமைச்சர் கய் பெர்மிலெய்ன் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜெமிசன் கீரெர் ஆகியோர் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

இந்த பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வரி குறைப்பு தொடர்பில் அரசாங்கம் அதிகாரபூர்வ செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளது.

சுவிட்சர்லாந்து தனது உற்பத்தி நிறுவனங்களில் பலவற்றை அமெரிக்காவுக்கு மாற்ற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.