அமெரிக்காவிற்கும் இலங்கைக்கம் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம்

Must Read

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான பாதுகாப்பு தொடர்புகள் மேலும் வலுப்பெறும் வகையில் இந்த ஒப்பந்த் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மொன்டானா நேஷனல் கார்ட், அமெரிக்க கடலோர காவல்படை (District 13) மற்றும் இலங்கை ஆயுதப்படைகள் ஆகியவற்றுக்கிடையிலான பாதுகாப்பு கூட்டாண்மையை அதிகாரப்பூர்வமாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதர் ஜூலி சங், மொன்டானா நேஷனல் கார்ட் படைப்பிரிவின் உயர் அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் ட்ரென்டன் கிப்சன், மற்றும் இலங்கை பாதுகாப்பு செயலாளர் சம்பத் துயகொன்தா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

இந்த நிகழ்வு, இரு நாடுகளின் பாதுகாப்பு உறவுகளில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டத்தை குறிக்கிறது.

குறிப்பாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலைத்தன்மை, கடல் பாதுகாப்பு மற்றும் தொழில்முனைவு ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியாக இது கருதப்படுகிறது.

“இன்று கையொப்பமிட்ட ஒப்பந்தம், பாதுகாப்பான இந்தோ-பசிபிக் நோக்கில் எங்கள் ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது,” என தூதர் ஜூலி சங் தெரிவித்தார்.

“மொன்டானாவில் காட்டுத்தீ, பெருவெள்ளம் உள்ளிட்ட அவசர நிலை மேலாண்மை முதல் உலகளாவிய மனிதாபிமானப் பணிகள் வரை, மொன்டானா நேஷனல் கார்டின் திறமைகள் வியப்பளிக்கின்றன. இந்த புதிய கூட்டாண்மை, நம்பிக்கை மற்றும் அமைதி உருவாக்கும் மற்றொரு உறுதியான படியாகும்,” என மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம், இலங்கையின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தும் முன்னேற்றமான முயற்சியாகும். பல ஆண்டுகளாக இரு நாடுகளும் ராணுவப் பயிற்சி, பேரிடர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு பரிமாற்றங்கள் போன்ற துறைகளில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த புதிய கட்டமைப்பு, புதிய வாய்ப்புகளுக்கு ஆரம்பமாக இருக்கும் என பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொன்தா தெரிவித்துள்ளார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.