இந்தியாவின் ஸ்ரீநகர் பகுதியில் நவகாம் போலீஸ் நிலையத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ஆளுநர் மனோஜ் சின்ஹா இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இந்த வெடிப்பு சம்பவத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதுடன் 32 பேர் காயமடைந்திருந்தனர்.
பொலிஸ் நிலையம் ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வெடிப்பு சம்பவத்திற்கும் பாகிஸ்தானின் தீவிரவாத குழுக்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் பொலிஸ் பிரிவினர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிப்புச் சம்பவம் தற்செயலாக இடம்பெற்ற ஓர் விபத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த வெடிப்பு சம்பவத்துடன் பாகிஸ்தானில் இயங்கி வரும் எந்த ஒரு தீவிரவாத குழுவிற்கும் தொடர்புக்கு கிடையாது என்பது என அறிவித்துள்ளது.
அண்மையில் ஹரியானா பகுதியில் கைப்பற்றப்பட்ட பாரிய வெடி பொருட்கள் தொடர்பில்லான ரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த பாரிய வெடிப்பு சம்பவம் பதிவாகி இருந்தது.
கடந்த இரண்டு நாட்களாக கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் குறித்த பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் என்ன காரணத்தினால் இந்த வெடி விபத்து ஏற்பட்டது என்பது குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சின் இணைச்செயலாளர் பிரசாந்த் லோகேந்திரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிடுவதாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிரதி முதல்வர் சுந்தர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
கடந்த 35 ஆண்டுகளாக பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத செயற்பாடுகளினால் மாநிலம் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வந்தது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கொடூர பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்துள்ளார்.
அவ்வாறு செய்வதன் மூலம் ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்கள் அமைதியாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வெடி விபத்தில் சேதமடைந்த கட்டிடங்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என ஜம்மு மற்றும் காஷ்மீரின் முதலமைச்சர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.

