ஐரோப்பிய விமான நிலையங்களில் தென்படும் மர்ம ட்ரோன்கள்

Must Read

ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில் இரவு நேரங்களில் மர்மமான ட்ரோன்களை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ட்ரோன்களின் தென்படுகையானது பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்த கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் இவ்வாறு ட்ரோன்களை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக உக்கிரனுக்கு ஆதரவு வழங்கும் மேற்குலக நாடுகளின் விமான நிலையங்களில்இவ்வாறான ட்ரோன்கள் பறப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நாடுகளின் விமான நிலையங்கள், மின் நிலையங்கள், ராணுவ தளங்கள் போன்றவற்றை ட்ரோன்கள் நோட்டம் விடுவதாக தெரிவிக்கப்படுகிறதுஃ

பெல்ஜியம், டென்மார்க், போலந்து, ஜெர்மனி, நோர்வே உள்ளிட்ட பல நாடுகளில் இவ்வாறு ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன.

இது ரஷ்யாவின் ஹைபிரைட் போர் முறை என மேற்குலக நாடுகளின் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சில நாடுகளின் பாதுகாப்பு இயலுமையை ரஷ்யா சோதிப்பதாகவும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும், இவ்வாறு ட்ரோன்களை அனுப்பவில்லை என ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது.

 கடந்த செப்டம்பர் மாதம் 9ம் திகதி போலந்தில் சுமார் 20 ரஷ்ய ட்ரோன்கள் வால்பரப்பில் நுழைந்திருந்தன.

இதனால் நான்கு விமான நிலையங்கள் மூடப்பட்டதுடன் நேட்டோ போர் விமானங்கள் அவசரமாக பறக்க விடப்பட்டிருந்தன என்பதுடன் சில ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன.

இவ்வாறு ட்ரோன்களை பறக்க விடுவதன் மூலம் விமான நிலையங்களுக்கு பெரும் ஆபத்துக்கள் ஏற்படலாம் எனவும் ராணுவ தளங்களில் உளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் மின் உற்பத்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் போர் தந்திரோபாயங்களுக்கு ஈடு கொடுக்கக்கூடிய வகையில் ஐரோப்பிய நாடுகள் தங்களது பாதுகாப்பு கட்டமைப்புக்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் போல் அல்லாது தற்காலத்தில் அதிக அளவில் பறக்க விடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.