வழமைக்குத் திரும்பும் அமெரிக்க விமான போக்குவரத்து

Must Read

நாடு முழுவதும் விமான சேவைகளை குறைக்க அறிவித்திருந்த அவசர உத்தரவை அமெரிக்கப் போக்குவரத்து துறை நீக்கியுள்ளது.

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் (Air Traffic Controllers) மீண்டும் பணிக்கு திரும்பியதால், பாதுகாப்பு அச்சங்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் முடக்க நிலை காலத்தில் சம்பளம் இன்றி வேலை செய்ய வேண்டிய கட்டாயம் காரணமாக பல கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு வராமல் இருந்தனர்.

இதன் விளைவாக பல விமானங்கள் தாமதமடைந்தன அல்லது ரத்து செய்யப்பட்டன.

இந்த சூழ்நிலையில், நவம்பர் 7 ஆம் திகதி முதல் விமான நிறுவனங்கள் தங்கள் திட்டமிட்ட விமானப் புறப்பாடுகளை குறைக்க வேண்டும் என அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம்  உத்தரவிட்டது.

அமெரிக்காவின் முடக்க நிலை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, பணியாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பியதால் நிலைமை விரைவாக சீராகிவருவதாக போக்குவரத்து துறை தெரிவித்தது.

அமெரிக்காவின் நன்றி அறிதல் அல்லது தாங்க்ஸ்கிவிங் விடுமுறை காலத்திற்கான பயணங்களுக்கு முன்னதாக இந்த விமான பயண நெரிசல் நிலை குறைவடைந்துள்ளது.

அமெரிக்காவில் இந்த விடுமுறைக் காலத்தில் 60 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் விமானப்பயணம் செய்வர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இது கடந்த வருடத்தை விடவும் அதிக எண்ணிக்கை என தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுப்பாட்டாளர்கள் தங்கள் பணியிடங்களுக்கு திரும்பியுள்ளதால், சாதாரண செயல்பாடுகள் மீண்டும் தொடங்கலாம் என போக்குவரத்து செயலாளர் சீன் டஃபி குறிப்பிட்டுள்ளார்.

இப்போது நமது கவனம் அதிக கட்டுப்பாட்டாளர்களை நியமிப்பதிலும், உயர்தர, புதிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குவதிலும் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

கடந்த 43 நாட்கள் நீடித்த முடக்கநிலை அமெரிக்க வரலாற்றிலேயே நீண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பளம் இல்லை என்பதால் பல கட்டுப்பாட்டாளர்கள் இரண்டாம் வேலை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

பணிக்கு வந்தவர்களும் மன அழுத்தம் மற்றும் சோர்வுக்கு உள்ளானதாக கூறப்படுகின்றது.

விமான நிலையங்கள் தாமதங்களை குறைக்க தூரத்தில் உள்ள கட்டுப்பாட்டு கோபுரங்களின் உதவியையும் நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதற்குள் ஏற்கெனவே இருந்த பணியாளர் பற்றாக்குறை பிரச்சினையை இது மேலும் மோசமாக்கியது.

அவசர உத்தரவின்படி உள்நாட்டு விமானங்களில் 10% வரை குறைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், நவம்பர் முதல் வாரத்தில் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.