வயது முதிர்ந்தவர்களை நோய்களிலிருந்து காக்கும் இசை

Must Read

வயது முதிர்ந்தவர்கள் இசையை  செவிமடுப்பதனால் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

70 வயதுக்கு மேற்பட்டவர்களில் இசை கேட்பதும், இசைக்கருவி வாசிப்பதும் மூளை ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றிய மொனாஷ் பல்கலைக்கழகத்தின் மிகப்பெரிய ஆய்வு நடத்தியுள்ளது.

இசையை செவிமடுப்பதனால் முதியோரில் ஞாபக மறதி உருவாகும் ஆபத்தை குறிப்பிடத்தக்க வகையில் குறைக்கலாம் என வெளிப்படுத்தியுள்ளது.

எம்மா ஜஃப்பா மற்றும் பேராசிரியர் ஜோயான் ரையன் தலைமையில் செய்யப்பட்ட இந்த ஆய்வில், 10,800-க்கும் மேற்பட்ட முதியவர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து இசை கேட்பவர்களுக்கு, இசை கேட்காதவர்களுடன் ஒப்பிடுகையில், 39% குறைவான ஞாபக மறதி நோய் அபாயம் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், இசைக்கருவி வாசிப்பவர்களுக்கு 35% குறைந்த அபாயம் இருப்பதாகவும் ஆய்வு கூறுகிறது.

ஆய்வு முடிவுகள் சர்வதேச மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

இசை கேட்பதும், வாசிப்பதும் இரண்டையும் வழக்கமாக மேற்கொண்டவர்களுக்கு ஞாபகமறதி நோய் ஏற்படக்கூடிய அபாயம் 33 வீதத்தினால் குறைவடையும் என ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இசைச் செயல்பாடுகள் முதியோரில் மூளை ஆரோக்கியத்தை பராமரிக்க எளிய வழியாக இருக்கும் வாய்ப்பு உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஞாபகமறதி நோய்க்கு இன்று வரை நிரந்தர சிகிச்சை இல்லை. எனவே அதன் ஆரம்பத்தைக் தடுப்பதற்கான அல்லது தாமதப்படுத்தும் வழிகளை கண்டறிவது மிக முக்கியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வயதைத் தாண்டியும் நம்முடைய வாழ்க்கை முறைகள், சூழ்நிலைத் தெரிவுகள் மூளை முதிர்வைத் தீர்மானிக்கின்றன.

இந்த ஆய்வு, இசை கேட்பதும் வாசிப்பதும் போன்ற வாழ்க்கை முறைச் செயல்பாடுகள் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவ முடியும் என்பதை குறிப்பிடுகிறது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.