தித்வா புயலினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 627ஆக அதிகரிப்பு

Must Read

இலங்கையைத் தாக்கிய தித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இதுவரை 627 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

மேலும் 190 பேர் காாணமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, நாட்டின் 25 மாவட்டங்களில் 21.7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • பாதிக்கப்பட்ட குடும்பங்கள்: 6,11,530
  • முழுமையாக இடிந்த வீடுகள்: 4,517
  • பகுதியாக சேதமடைந்த வீடுகள்: 76,066
  • மொத்த சேதமடைந்த வீடுகள்: 80,500க்கும் மேல்

அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் கண்டி:

  • உயிரிழப்பு: 232
  • காணாமல் போனோர்: 81
  • முழுமையாக இடிந்த வீடுகள்: 1,800
  • பகுதியாக சேதமடைந்த வீடுகள்: 13,000க்கும் மேல்

கொழும்பு, குருணாகல், கேகாலை, பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் உயிரிழப்புகளும் பெரும் சொத்து சேதங்களும் பதிவாகியுள்ளன.

தற்போது நாடு முழுவதும் 956 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி, 27,663 குடும்பங்களைச் சேர்ந்த 89,857 பேர் இந்த தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை இன்னும் சில மாவட்டங்களில் தொடர்வதால் எச்சரிக்கை நீடிப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.