எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சுவிட்சர்லாந்தில் பெருமளவு பனிப்பொழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என அந்நாட்டு வானியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, சுவிட்சர்லாந்தின் தாழ்வான நிலப்பகுதிகளில் வெள்ளை கிறிஸ்துமஸ் காணப்படும் வாய்ப்பு “கிட்டத்தட்ட இல்லை” எனவும் கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் காலத்தில் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் வடக்குப் பகுதியில் குறிப்பிடத்தக்க மழையோ அல்லது பனிப்பொழிவோ ஏற்படும் சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ளது.
1,000 மீட்டருக்கு கீழான பகுதிகளில் பனி பெய்யாது என்பதே தற்போதைய கணிப்பாக உள்ளது.
தற்போதைய வானிலை முன்னறிவிப்பின்படி, மலைப்பகுதிகளில் பெரும்பாலும் வெயில் நிலவும். அதே நேரத்தில் தாழ்வான பகுதிகளில் பனி மூட்டம் அல்லது மேகமூட்டம் காணப்படலாம்.
சில நேரங்களில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 1°C முதல் 6°C வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
எனினும், கிறிஸ்துமஸ் கால வானிலை குறித்து முழுமையான உறுதியான கணிப்பை இப்போதைக்கு வழங்க முடியாது என்றும் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

