பொன்டி கடற்கரை தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவர் தென்னிந்தியர்!

Must Read

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் பொன்டி கடற்கரையில் பாரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஓருவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொன்டி கடற்கரைப் பகுதியில் ஹனுக்கா கொண்டாட்ட நிகழ்வின்போது நடந்த கூட்டுத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு நபர்களில் ஒருவர், தென்னிந்தியாவைச் சேர்ந்தவரெனத் தெரிய வந்துள்ளது.

ஆனால், இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினருடன் அவர் “மிகக் குறைந்த தொடர்பே” வைத்திருந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தாக்குதலின்போது சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 50 வயதான  சாஜிட் அக்ரம் முதலில் ஹைட்ராபாத் நகரத்தைச் சேர்ந்தவர் என தெலுங்கானா மாநில பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

1998-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு குடியேறிய பின்னர், அவர் ஆறு முறை மட்டுமே இந்தியா வந்துள்ளதாகவும், அவரது குடும்பத்தினர் அவரது தீவிரவாத மனப்பாங்கு அல்லது செயல்பாடுகள் குறித்து எதுவும் அறியவில்லை மாநில பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சாஜித் அக்ரம் மற்றும் அவரது 24 வயது மகன் நவீட் ஆகியோர், ஹனுக்கா விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் 15 பேரை கொன்றதாகவும், பலரை காயப்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு குடியேறிய பின்னர் சாஜித், சொத்து விவகாரங்கள் மற்றும் முதிய பெற்றோரை சந்திப்பது போன்ற குடும்ப காரணங்களுக்காக மட்டுமே இந்தியா வந்துள்ளார். தந்தையின் மறைவின்போதுகூட அவர் இந்தியா வரவில்ல என்று தெரிவித்துள்ளர்ர்.

மேலும், சாஜித் அக்ரம் மற்றும் அவரது மகன் தீவிரவாத பாதைக்கு மாற காரணமான சூழ்நிலைகள் இந்தியாவோ அல்லது தெலுங்கானா மாநிலத்தோடு எந்தவித தொடர்பும் இல்லையெனத் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சாஜித் மீது இந்தியாவில் எந்த குற்றப் பதிவும் இல்லை; பட்டம் பெற்ற அவர் வேலை தேடி அவுஸ்திரேலியா சென்றதாகவும், ஐரோப்பிய பூர்வீகத்தைக் கொண்ட பெண்ணை திருமணம் செய்ததாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாஜித் அக்ரம் இந்தியக் கடவுச்சீட்டு வைத்திருந்தாலும், அவரது குழந்தைகள் அவுஸ்திரேலியாவில் பிறந்தவர்கள் மற்றும் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர்கள் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.