துருக்கி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு விமானம், பார்சிலோனாவின் எல் பிராட் விமான நிலையத்தில் வியாழக்கிழமை அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயணியொருவர் விமானத்தில் அமைத்த வயர்லெஸ் நெட்வொர்க்கின் பெயரில் குண்டு அச்சுறுத்தலைக் காட்டியதால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளுது.
இஸ்தான்புல்லில் இலிருந்து பார்சிலோனா நோக்கி வரும் விமானம் கடைசிக் கட்டத்தில் சென்றபோது, பயணியொருவர் விமானத்தில் இணைய அணுகல் புள்ளியை (in-flight internet access point) உருவாக்கி அதில் குண்டு அச்சுறுத்தல் குறியீட்டைக் கொண்ட பெயரைச் சேர்த்தார் என நிறுவனத் தொடர்பாளர் யாஹ்யா உஸ்டுன் தெரிவித்துள்ளார்.
இதனால் விமானம் அவசர நிலைமையில் தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஸ்பெயின் சிவில் காவல் படை (Civil Guard) இந்த சம்பவத்தை விசாரணை செய்யும் நிலையில் உள்ளது.
விமான நிலையம் தற்போது இயல்பான முறையில் செயல்பட்டு வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

