டிரம்பின் சமாதான சபையில் இணையுமாறு சுவிட்சர்லாந்திற்கு அழைப்பு

Must Read

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிறுவ உள்ளதாக அறிவித்துள்ள “சமாதான சபை” (Board of Peace) அமைப்பில் இணைவதற்காக சுவிட்சர்லாந்துக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் இந்த அழைப்பு வழங்கப்பட்டதாக, சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் பிரிவு தலைவர் நிக்கோலாஸ் பிடோ, தெரிவித்துள்ளார்.

சமாதான சபையின் சாசன விவரங்களை தற்போது சுவிட்சர்லாந்து ஆராய்ந்து வருகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட ஆர்வமுள்ள தரப்புகளுடன் இது தொடர்பாக கலந்துரையாடல்களும் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

டாவோஸில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மன்றம் கூட்டத்திற்கு சமாந்திரமாக நடைபெற்றும் வரும் நிகழ்வுகளில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக டிரம்ப் இந்த வாரம் டாவோஸில் ‘பல்வேறு தரப்புகளுடன்’ நடத்த திட்டமிட்டுள்ள கூட்டத்திற்கு சுவிட்சர்லாந்துக்கு அழைப்பு வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.