அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஐரோப்பாவை கடுமையாக விமர்சித்து, அதன் சில பகுதிகள் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டன” எனக் கூறினார்.
ஐரோப்பிய அதிகாரிகள் பங்கேற்றிருந்த நிரம்பிய டாவோஸ் மாநாட்டு அரங்கில் உரையாற்றிய அவர், மிகக் குறுகிய நேரத்திலேயே இந்த கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
யாரையும் அவமரியாதை செய்ய விரும்பவில்லை எனவும் ஐரோப்பாவை கருத்திற்கொள்ளவில்லை எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கிரீன்லாந்தை இணைத்துக்கொள்ளும் நோக்கங்களால் ஏற்கனவே அமெரிக்கா–ஐரோப்பா உறவுகள் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், டிரம்பின் இந்த கருத்துகள் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
ஐரோப்பாவின் குடியேற்றக் கொள்கைகளும் பொருளாதார நடவடிக்கைகளும் பேரழிவான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் பொருளாதார அதிசம் ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் ஐரோப்பாவை நேசிக்கிறேன். ஐரோப்பா நன்றாக வளர வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் அது சரியான பாதையில் செல்லவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகரிக்கும் அரசு செலவுகள், கட்டுப்பாடில்லா பெருமளவு குடியேற்றம், முடிவற்ற வெளிநாட்டு இறக்குமதிகள் என்பவற்றை அதற்கான காரணங்களாக அவர் சுட்டிக்காட்டினார்.

