சுவிட்சர்லாந்தின் வலே (Valais) கண்டோனில் உள்ள தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
பின்னர் தீயணைப்பு படையினர் தீயை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலை சுமார் 6 மணியளவில் ரூ சென்ட்ரால் (Rue Centrale) பகுதியில் அமைந்திருந்த நினைவிடத்தில் தீப்பரவல் ஏற்பட்டதாக காவல்துறை சமூக ஊடக தளமான X வழியாக அறிவித்துள்ளது.
தீ விபத்தில் எவரும் காயமடையவில்லை. நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேடு (Book of Condolences) தீயிலிருந்து பாதுகாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்விடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் அழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஆரம்ப கட்ட விசாரணையின் அடிப்படையில், நினைவிடத்தின் மையப்பகுதியில் மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்திகளிலிருந்து தீப்பற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
திட்டமிட்ட தீ வைப்பு சம்பவமாக இருப்பதற்கான சான்றுகள் இதுவரை இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த புத்தாண்டு தினத்தில் கிரான்ஸ்-மொன்டானாவில் உள்ள ‘லெ கான்ஸ்டெலேஷன்’ (Le Constellation) மதுபான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் காயமடைந்திருந்தனர்.
அந்தச் சம்பவத்திற்கான இரங்கல் நினைவாகவே இந்நினைவிடம் அமைக்கப்பட்டிருந்தது.

