இன்ஸடா, யூடியூப் என்பனவற்றுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள அதிரடி வழக்கு

Must Read

உலகின் முதனிலை சமூக ஊடகங்களான இன்ஸடா, யூடியூப் என்பனவற்றுக்கு எதிராக அமெரிக்காவில் பாரதூரமான குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Instagram மற்றும் YouTube பயன்பாட்டின் மனநல விளைவுகளை ஆய்வு செய்யும் முக்கிய வழக்கு கலிஃபோர்னியாவில் தொடங்கியுள்ளது.

உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனங்கள் குழந்தைகளின் மூளையை அடிமைப்படுத்தும் வகையில் “addiction machines” (அடிமை இயந்திரங்கள்) உருவாக்கியுள்ளதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

லாஸ் ஏஞ்சல்ஸ் உயர் நீதிமன்ற நீதிபதி கேரலின் பி. குஹ்ல் முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கில், மனுதாரியான “K.G.M.” (அவர் சிறுமியாக இருந்த காலத்தில் சம்பவங்கள் நடந்ததால் முழுப் பெயர் வெளியிடப்படவில்லை) சமூக ஊடக அடிமைத்தனத்தின் காரணமாக கடுமையான மனநல பிரச்சினைகளை சந்தித்ததாக அவரது வழக்கறிஞர் மார்க் லேனியர் தொடக்க வாதத்தில் தெரிவித்தார்.

“இந்த நிறுவனங்கள் குழந்தைகளின் மூளையை அடிமைப்படுத்தும் வகையில் திட்டமிட்டு இயந்திரங்களை உருவாக்கின,” என லேனியர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினார்.

மேலும், இளம் பயனர்களுக்கு தங்கள் தள வடிவமைப்பால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து Meta மற்றும் YouTube எச்சரிக்கை வழங்கத் தவறியதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடக்க வாதத்தின் போது “Addicting”, “Brains”, “Children” என்ற வார்த்தைகள் கொண்ட குழந்தைகளின் விளையாட்டு கட்டங்களை (blocks) பயன்படுத்தி, இது குழந்தைகள் மீது திட்டமிட்ட தாக்கமாக இருந்ததாக அவர் வலியுறுத்தினார்.

Meta நிறுவனத்தின் உள்துறை ஆவணங்கள் மற்றும் CEO மார்க் ஸக்கர்பெர்க், YouTube நிர்வாகிகளின் மின்னஞ்சல்களை நீதிமன்றத்தில் வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டதாக கூறப்படும் ஒரு மின்னஞ்சலில், Meta தளங்களில் செலவிடப்படும் நேரத்தை 12% அதிகரிக்க வேண்டும் என ஸக்கர்பெர்க் கோரியிருந்ததாகவும் லேனியர் சுட்டிக்காட்டினார்.

YouTube, அதன் YouTube Kids தளத்தை விட அதிக விளம்பர வருமானம் பெற இளம் பயனர்களை குறிவைத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆனால் Meta மற்றும் YouTube தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், K.G.M.யின் மனநலப் பிரச்சினைகள் அவரது குடும்பச் சூழல், புறக்கணிப்பு, உடல் மற்றும் வாய்வழி துஷ்பிரயோகம், பெற்றோரால் செய்யப்பட்ட இகழ்ச்சி போன்ற காரணங்களால் ஏற்பட்டவை என்றும், நிறுவனங்களின் அலட்சியத்தால் அல்ல என்றும் வாதிட்டனர்.

K.G.M. சிறுவயதிலிருந்தே குடும்ப வன்முறை மற்றும் உளவியல் சிக்கல்களை சந்தித்திருந்தார் என மருத்துவ பதிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். “மன அழுத்தம் குறித்த வழக்கில் இத்தகைய பின்னணிகளை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்,” என Meta தரப்பு வழக்கறிஞர் பால் ஷ்மிட் தெரிவித்தார்.

இந்த வழக்கு ஆறு வாரங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரங்களில் நிபுணர்கள், சமூக ஊடக பயன்பாட்டால் உயிரிழந்ததாக நம்பப்படும் குழந்தைகளின் குடும்பத்தினர், Meta தலைவர் மார்க் ஸக்கர்பெர்க், Instagram தலைவர் ஆடம் மொசெரி, YouTube தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன் உள்ளிட்டோர் சாட்சி அளிக்க உள்ளனர்.

மேலும், குழந்தைகள் மத்தியில் சமூக ஊடக அடிமைத்தனத்தை பற்றி தகவல் வெளியிட்ட முன்னாள் Meta ஊழியர்களும் சாட்சி அளிக்கவுள்ளனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு, அமெரிக்கா முழுவதும் நிலுவையில் உள்ள ஆயிரக்கணக்கான இதேபோன்ற வழக்குகளுக்கு முக்கிய முன்னுதாரணமாக அமையலாம்.

ஏற்கனவே 29 மாநில சட்டத்துறைத் தலைவர்கள் Meta நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். 13 வயதுக்குட்பட்ட பயனர்களின் கணக்குகளை நீக்குதல், சேகரிக்கப்பட்ட தரவுகளை அழித்தல், அல்கோரிதம் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளில் மாற்றம் செய்தல் போன்ற உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இளம் பயனர்களுக்கான பள்ளி நேர மற்றும் இரவு நேர பயன்பாட்டைத் தடை செய்தல், முடிவில்லா ஸ்க்ரோல் (infinite scroll), தானியங்கி இயக்கம் (autoplay), அழகியலை மேம்படுத்தும் ஃபில்டர்கள் போன்ற “அடிமை அம்சங்களை” நீக்குதல் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

Meta நிறுவனம் அண்மையில் “teen accounts” என்ற பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியிருந்தாலும், அது வெறும் பொது தொடர்பு முயற்சிதான் என மாநில சட்டத்துறை தரப்பினர் விமர்சித்துள்ளனர்.

இவ்வழக்கில் Snapchat மற்றும் TikTok நிறுவனங்கள் கடந்த மாதம் சமரசம் செய்து வழக்கிலிருந்து விலகியுள்ளன.

லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த முதல் நாள் விசாரணையை சுமார் 100 பேர் பார்வையிட்டனர். தங்கள் குழந்தைகள் சமூக ஊடக அல்கோரிதங்கள் மற்றும் அறிவிப்புகளின் தாக்கத்தால் உயிரிழந்ததாக நம்பும் பெற்றோர்களும் நீதிமன்றத்தில் பங்கேற்றனர்.

இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு, சமூக ஊடக நிறுவனங்களின் பொறுப்புகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சட்ட விவாதங்களுக்கு புதிய திசையை அமைக்கக்கூடும்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.